சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: ஜி.கே.மணி பேச்சுக்கு முதல்வர் பதில்

3 weeks ago 5

பீகார் அரசு நடத்தியற்கு நீதிமன்றம் தடை விதித்து விட்ட நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் கலந்து கொண்டு பெண்ணாகரம் தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி (பாமக) பேசியதாவது: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்க வேண்டும். ஒரு சொட்டு மழைநீர் கூட கடலுக்குள் செல்லாத வகையில் பெரிய திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். 80 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். வேலை வாய்ப்பை அதிகம் உருவாக்க வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் வர வேண்டும். சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மாநில அரசே அவ்வாறு கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பீகார் மாநிலத்தில் இதேபோன்று மாநில அரசே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது.

ஆனால், நீதிமன்றம் தடைவிதித்து விட்டது. அதனால் தான் சொல்கிறேன். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நமக்கு (மாநில அரசுக்கு) அதிகாரம் இல்லை. அமைச்சர் சிவசங்கர்: ஒன்றிய அரசு எடுத்தால் ‘கணக்கெடுப்பு’. மாநில அரசு எடுத்தால் ‘புள்ளி விவரம் சேகரிப்பு’. உங்கள் கட்சியில் தான் ஆசிரியர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்க கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால், அவர்களை வைத்தே மக்கள் தொகையை கணக்கெடுப்பு நடத்தவும் சொல்கிறீர்கள். ஜி.கே.மணி: சாதிவாரி கணக்கெடுப்பே தமிழகத்தில் நடக்காதா?. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

 

The post சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: ஜி.கே.மணி பேச்சுக்கு முதல்வர் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article