சாதிவாரி கணக்கெடுப்புக்காக குரல் கொடுப்பதில் நக்சலைட்டுகளின் கருத்தாக்கம் என்று கூறுவது அம்பேத்கரை அவமானப்படுத்தும் எண்ணம்: பாஜகவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

1 week ago 2

நாக்பூர்: சாதிவாரி கணக்கெடுப்புக்காக குரல் கொடுப்பதில் நக்சலைட்டுகளின் கருத்தாக்கம் என்று கூறுவது மராட்டிய மைந்தர் அம்பேத்கரை அவமான படுத்தும் எண்ணம் என்று பாஜகவை வன்மையாக கண்டித்த ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது உறுதி என முழங்கினார். நாக்பூரில் அண்மையில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைவர்க்கும் அரசமைப்பு சட்ட புத்தகம் விநியோகிக்கப்பட்டது. அந்த புத்தகத்தின் முன்பக்கத்தில் இந்திய அரசமைப்பு என்று குறிப்பிட்டு புத்தகத்தின் உள்ளே வெற்று காகிதம் மட்டுமே இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

வெற்று காகிதமாக உள்ள இந்த புத்தகத்தை போல அரசமைப்பு சட்டத்தில் அம்பேத்கரால் எழுதப்பட்ட அனைத்து சட்டங்களையும் அழிக்க காங்கிரஸ் முயல்வதாக பாஜக குற்றம்சாட்டியது. அந்த புத்தகத்தில் ராகுல் காந்தி காட்டிய அரசமைப்பு புத்தகம் சிவப்பு நிறத்தில் இருந்ததை சுட்டிக்காட்டினர். ஹர்பன் நெக்சல் பக்கம் சாய்வதாக மராட்டிய துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் விமர்சித்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் ராகுல் காந்தி பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.

The post சாதிவாரி கணக்கெடுப்புக்காக குரல் கொடுப்பதில் நக்சலைட்டுகளின் கருத்தாக்கம் என்று கூறுவது அம்பேத்கரை அவமானப்படுத்தும் எண்ணம்: பாஜகவுக்கு ராகுல் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article