சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

1 week ago 3

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு மிகவும் சிறப்பானது என்றும் அதன் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “இந்தியப் பிரதமராகிய தங்களுக்கு இதுவரை இல்லாத வகையில், மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்திய மக்களுக்கு முழுமையான சமூகநீதியை வழங்கும் வகையில், நாடு முழுவதும் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த தங்கள் தலைமையிலான அரசு ஆணையிட்டிருப்பது தான் இதற்கு காரணம். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Read Entire Article