
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநில அளவில் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.