சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து இன்று கலந்தாய்வு கூட்டம்: அன்புமணி அறிவிப்பு

3 months ago 8

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியது குறித்து சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுடன் விவாதிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை ஏற்பாடு செய்திருக்கிறது.

சென்னை தியாகராயர் நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் இன்று, நாளை என இரண்டு நாட்களுக்கு காலை 10.30 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து மிகவும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து இன்று கலந்தாய்வு கூட்டம்: அன்புமணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article