சாதிய கட்சிகளுக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு

3 hours ago 2

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு கிளையில் செல்வகுமார் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்பு குழு, தமிழக காவல்துறை தலைவர் தலைமையில் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த உத்தரவிட கோரியுள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையத்தில் பதிவு பெறாத, தேர்தலில் போட்டியிடாத சாதிய கட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக தமிழக ஆதி திராவிட நலத்துறையின் செயலர், தமிழக காவல்துறை தலைவர், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

Read Entire Article