வேலூரில் சிங்கம் உலாவுவதாக போலி வீடியோ - வனத்துறை விளக்கம்

3 hours ago 2

வேலூர்,

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் சமீபத்தில் சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்த நிலையில், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள பெட்ரோல் பங்கில் சிங்கம் உலா வருவதாக, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதுதொடர்பாக வனத்துறையினர் அளித்துள்ள விளக்கத்தில், சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் சிங்கம் உலாவிய வீடியோவை சமூக விரோதிகள் தவறாக பரப்பி வருவதாகவும், போலியான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் சிங்க நடமாட்டம் இல்லை என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். 

Read Entire Article