டேராடூன்,
உத்தரபிரதேச மாநில நிதி மந்திரி பிரேம்சந்த் அகர்வால். இவரது மகன் பியூஷ் அகர்வால். இந்நிலையில், பியூஷ் அகர்வால் தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்ட வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மரம் வெட்டும் பணிகள் நடைபெற்றுள்ளன. அப்போது, பாதுகாக்கப்பட்ட அரிய வகை 2 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதையடுத்து, அனுமதியின்றி அரிய வகை மரங்களை வெட்டியதற்காக பியூஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.