சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் விளிம்பு நிலை மக்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

4 hours ago 4

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் தளபதிவில்,‘நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது பெரும் வரவேற்புக்குரியது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட, விளிம்பு நிலை மக்களின் சமூக, பொருளாதார சூழல் அறிந்து அதற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை சமூக மாற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி,’என்று கூறப்பட்டுள்ளது.

The post சாதி வாரி கணக்கெடுப்பு மூலம் விளிம்பு நிலை மக்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article