'சாதி நமது அடிப்படை கட்டமைப்பில் இருக்கிறது; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம்' - ஜெய்ராம் ரமேஷ்

2 hours ago 2

புதுடெல்லி,

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், சாதி நமது அடிப்படை கட்டமைப்பில் இருக்கிறது எனவும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்பதற்குப் பெயர் சாதி வெறியா? அரசியலமைப்பை காக்க வேண்டும் என்று கூறினால் அது சாதி வெறியா? சாதி என்பது பல நூற்றாண்டுகளாக நமது அடிப்படை கட்டமைப்பில் இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியமானது.

எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்கிறது. அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் தேசப்பற்று மிகுந்தவர்கள். ஆங்கிலேயர்களிடம் தங்கள் உயிரை காத்துக் கொள்வதற்காக அடிபணிந்து நின்றவர்கள் இன்று காங்கிரஸ் கட்சியினருக்கு தேசபக்தி இல்லை என்று கூறுகிறார்கள்."

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.  

Read Entire Article