சவாரிக்கு வந்த பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறித்த ஆட்டோ ஓட்டுநர்

6 months ago 43
விருதுநகர் அருகே ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை கத்தியால் தாக்கி நான்கரை சவரன் நகைகளை பறித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கபாண்டியன் என்பவரை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்யும் சங்கர், சித்ராதேவியை அதே பகுதியை சேர்ந்த தங்க பாண்டியன் அருப்புக்கோட்டைக்கு சவாரிக்கு செல்வதாக கூறி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டதுடன், வழியில் தனது நண்பர் ராமநாதன் என்பவரையும் ஏற்றியதாக கூறப்படுகிறது. பாலவநத்தம் அருகே ஆட்டோவை காட்டுப்பகுதிக்கு திருப்பியதால் சித்ராதேவி சத்தமிட்டதாகவும், அப்போது இருவரும் சேர்ந்து கத்தியால் தாக்கி கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். முகம் மற்றும் கழுத்தில் பலத்த காயங்களுடன் சித்ராதேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Read Entire Article