களக்காடு,ஜன.19: களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டி நடந்தது. இதில் திருவள்ளுவர் படிப்பக நிறுவனர் நம்பிராஜன் தலைமை வகித்தார். சங்கரவேல், வேலையா, மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர். அர்ஜூன் அறிவழகன் வரவேற்றார். இதனைதொடர்ந்து சுரேஷ்குமார், அஜித், பாலசேர்மன் ஆகியோர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சந்திரசேகர், மதியழகன் பரிசுகள் வழங்கினர். ஆசிரியை முத்துலட்சுமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். ஆசிரியர் தர், அரசு, சந்திரன், சிவகுமார் வாழ்த்தி பேசினர். முத்துசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்பனா, சுமதி, சந்தியா, பிரபு, சந்திரன், சேர்மன், அருள்மோகன் செய்திருந்தனர்.
The post சவளைக்காரன்குளத்தில் விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.