சென்னை: நாம் தமிழர் என்ற அடிப்படையில் கட்சி ஆரம்பித்துவிட்டு நான் மட்டுமே என்ற சர்வாதிகார போக்குடன் சீமான் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமரன் குற்றம்சாட்டியுள்ளார். சமீபகாலமாக நாதகவில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருவது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகுவதாக தெரிவித்தார். அப்படியே விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். இவர்கள் அனைவருமே சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த நிலையில் தற்போது, சர்வாதிகார போக்குடன் சீமான் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிகுமரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சீமானை நம்பி எண்ணற்ற தமிழர்கள் பொருளாதாரம், குடும்பத்தை இழந்து தவிப்பதாக கூறியுள்ளார். கட்சி வளர தொடங்கும் பொழுது இது நமது கட்சி என்றார். கட்சி வளர்ந்த பிறகு இது என்னுடைய கட்சி என்றார். தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை சந்தித்து பெருவாரியாக ஆதரவு கொடுத்து உள்ளனர். நவம்பர் 27 திருச்சியில் மாபெரும் எழுச்சி மிகுந்த வீரவணக்க நாளை நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
The post சர்வாதிகாரப்போக்குடன் நடந்து கொள்கிறார்: சீமான் மீது முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.