
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் பானு முஷ்டாக். கன்னட எழுத்தாளரான இவர் சமூக செயற்பாட்டாளராகவும், வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, இவர் கன்னடத்தில் ஹசீனா அண்ட் அதர் ஸ்டோரிஸ் என்ற தலைப்பில் புத்தக தொகுப்பை எழுதியிருந்தார். 1990 முதல் 2012ம் ஆண்டு இடைவெளியில் வெளியிடப்பட்ட இந்த புத்தக தொகுப்பு தென்னிந்தியாவில் இஸ்லாமிய மதப்பெண்களின் வாழ்வியல் குறித்து வெளிப்படுத்தியது.
இந்த புத்தகம் ஆங்கிலத்தில் ஹார்ட் லெம்ப் என்ற பெயரில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
இந்நிலையில், ஹார்ட் லெம்ப் புத்தகத்தை எழுதியத பானு முஷ்டாக் சர்வதேச புக்கர் பரிசு வென்றுள்ளார். சர்வதேச புக்கர் பரிசு வெல்லும் முதல் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் ஆவார். அவருக்கு லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் விருதும் 58 லட்ச ரூபாய் பணமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச புக்கர் பரிசு வென்ற பானுவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.