சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் படைத்திராத மாபெரும் சாதனை படைத்த சாம்சன்

2 hours ago 1

ஜோகன்னஸ்பர்க்,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மாவின் அதிரடி சதத்தின் மூலம் 283 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வெறும் 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 148 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் டி20 கிரிக்கெட்டில் நடப்பாண்டில் (2024) அவரது 3-வது சதமாக பதிவானது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வருடத்தில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

Read Entire Article