
சென்னை,
சர்வதேச கிளாசிக்கல் ஓபன் செஸ் போட்டி சென்னையை அடுத்த பொன்னேரியில் உள்ள வேலம்மாள் சர்வதேச பள்ளியில் இன்று முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.4 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.