சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி நெல்லை ஜி.ஹெச்சில் மெழுகுவர்த்தியுடன் நர்ஸ்கள் பேரணி

5 hours ago 3

*டீன் ரேவதி பாலன் துவக்கிவைத்தார்

கேடிசி நகர் : செவிலியர் பணியில் நவீன முறைகளை புகுத்திய பிளாரன்ஸ் நைட்டிங்கேலை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த தினமான நேற்று சர்வதேச செவிலியர் தினமாக கடைபிடிக்கப்பட்டது.

இதை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்ததுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தை மருத்துவ கல்லூரியின் டீன் ரேவதி பாலன் தொடங்கி வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் நடந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், உயிர் காக்கும் நற்பணிக்கு எந்தப் பணியும் ஈடு இல்லை. அந்தப் பணியை முன்னெடுக்கும் செவிலியத்தை போற்றுவோம் என முழங்கியபடி பேரணியாக சென்றனர்.

முன்னதாக மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமையில் கல்லூரி பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம், தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் ராமஜெயராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி நெல்லை ஜி.ஹெச்சில் மெழுகுவர்த்தியுடன் நர்ஸ்கள் பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article