சர்வதேச கூட்டுறவு ஆண்டு தொடர்பாக பாட்டு ரெடி பண்ணுங்க… பரிசு ரூ.50,000 வெல்லுங்க… மே 30ம் தேதி கடைசி நாள்

2 days ago 5

விருதுநகர், ஏப்.17: விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: 2025ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டாக உலகளவில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு அனுப்பப்படும் பாடலானது இசையமைக்கப்பட்டு 5 நிமிடங்கள் ஒலிபரப்பக் கூடிய வகையில், பாடல் வரிகள் இருக்க வேண்டும். கூட்டுறவு பற்றிய தமிழில் தனித்துவமான பாடலாக இருக்க வேண்டும். ஜாதி, மதம் மற்றும் அரசியல் அமைப்புசாரா வண்ணம் பாடல்கள் இருக்க வேண்டும்.கூட்டுறவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி மற்றும் உத்வேகம் உண்டாக்கக் கூடியதாக பாடல்கள் இருக்க வேண்டும்.

அனுப்பப்படும் பாடலின் Hard Copy-ஐ கூரியர்/ தபால் மூலம் ‘மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், என்.வி. நடராசன் மாளிகை, 170, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்பாக்கம் சென்னை-600 010’ என்ற முகவரிக்கும், பாடலின் Soft Copy ஐ தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் 30.05.2025ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.அனுப்பப்படும் பாடல்கள் ஏற்றுக் கொள்ள மற்றும் நிராகரிப்பதற்கு தேர்வுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. அனுப்பப்படும் பாடல்களில் சிறந்த பாடல் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பாடலுக்கு ரூ.50,000க்கான பணம் முடிப்பு மற்றும் கேடயம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சர்வதேச கூட்டுறவு ஆண்டு தொடர்பாக பாட்டு ரெடி பண்ணுங்க… பரிசு ரூ.50,000 வெல்லுங்க… மே 30ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Read Entire Article