சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பாகிஸ்தான் வீரராக ஷாகீன் அப்ரிடி வரலாற்று சாதனை

3 hours ago 2

டர்பன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி2ஒ போட்டி முடிவடைந்துள்ளது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மில்லர் 82 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி, அப்ரார் அகமது தலா 3 விக்கெட்டுகளும், அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 74 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் வீழ்த்திய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி டி20 கிரிக்கெட்டில் இதுவரை 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை கடந்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 4 வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளிலும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Read Entire Article