சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - முகமது அமீர் அறிவிப்பு

4 weeks ago 5

கராச்சி,

பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான முகமது அமீர் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.

பந்தை வேகமாக வீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் வல்லவராக இருந்தார் முகமது ஆமீர். ஆனால், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஓராண்டு கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டு மோசமான நிலையையும் அடைந்தார். தற்போது 32 வயது ஆகும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். ஆனால், கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற வேண்டி தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார். டி20 உலக கோப்பை முடிந்த பின் அவருக்கு பாகிஸ்தான் அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து தற்போது மீண்டும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். முகமது ஆமீர் தனது துவக்க காலத்தில் துல்லியமாக பந்து வீசுவதில் வல்லவராக இருந்தார். பாகிஸ்தான் அணி 2009 டி20 உலகக் கோப்பையை வென்றதில் முகமது ஆமீருக்கு முக்கிய பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article