மெல்போர்ன்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்ட் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய ஜெசிகா பெகுலா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மாயா ஜாயிண்டை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.