சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு

2 months ago 13

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ வேட் (வயது 36), இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 15 ஐ.பி.எல். போட்டிகளிலும் ஆடி உள்ளார். டெஸ்ட்டில் 1613 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்னும், டி20 போட்டிகளில் 1202 ரன்னும் அடித்துள்ளார்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். மேலும், இவர் கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தார். டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில், மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இவரது முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட்டுக்கு இடம் கிடைக்காது என தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும், அதன் காரணமாக அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


An Australian veteran has called time on his 13-year international career

Details https://t.co/xiiAqlAsFY

— ICC (@ICC) October 29, 2024

Read Entire Article