சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு

4 weeks ago 8

பிரிஸ்பேன்: இந்திய அணியின் மூத்த சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்த சில நிமிடங்களில் தனது ஓய்வை ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். அவரின் அறிவிப்பு இந்திய ரசிகர்களிடையே அதிற்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளிப்படுத்த போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அஷ்வின் இணைந்தார். அப்போது “பிசிசிஐ மற்றும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மிக முக்கியமாக கேட்ச்களை பிடித்ததாக ரோஹித், கோஹ்லி, புஜாரா, ரஹானே ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என அஷ்வின் தெரிவித்தார்.

அஷ்வின் ஓய்வு குறித்து ரோஹித் தெரிவித்துள்ளதாவது; “பெர்த் டெஸ்டின்போதே அஷ்வினின் ஓய்வு குறித்து நான் அறிந்து கொண்டேன். பிங்க் பால் டெஸ்ட் வரையாவது விளையாடுமாறு கேட்டு கொண்டேன். இந்தியா இதுவரையில் பார்க்காத ஒரு மேட்ச் வின்னர் அஷ்வின்” என தெரிவித்தார்.

அஸ்வின் கடைசியாக அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இடம்பெற்றார். 287 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 765 சர்வதேச விக்கெட்டுகளுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொண்டார்.

The post சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article