சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்; ஆண்டர்சனின் மாபெரும் சாதனையை தகர்த்த ஆர்ச்சர்

3 hours ago 2

லாகூர்,

8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகின் ஜட்ரான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் 6 ரன்னிலும், அடுத்து வந்த செடிகுல்லா அடல் 4 ரன்னிலும், ரஹ்மத் ஷா 4 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனால் அந்த அணி 37 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. இந்த 3 மூன்று விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.

இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் மாபெரும் சாதனை ஒன்றை ஜோப்ரா ஆர்ச்சர் தகர்த்துள்ளார். அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற ஆண்டர்சனின் சாதனையை ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். தற்போது ஆர்ச்சர் 30 போட்டிகளிலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் விவரம்:

ஜோப்ரா ஆர்ச்சர் - 30 போட்டிகள் *

ஜேம்ஸ் ஆண்டர்சன் - 31 போட்டிகள்

ஸ்டீவ் ஹார்மிசன் - 32 போட்டிகள்

ஸ்டீவன் பின் - 33 போட்டிகள்

டேரன் காப் - 34 போட்டிகள்

Read Entire Article