2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த மூன்று நாள் விழா இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் விருதுக்கு ஷாருக்கான் தேர்வாகியுள்ளார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
சிறந்த படமான ரன்பீர் கபூர் நடித்த 'அனிமல் 'படம் தேர்வாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை இயக்கி இருந்தார்.
சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே' படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
சிறந்த இயக்குநராக '12த் பெயில்' படத்தை இயக்கிய விது வினோத் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
சிறந்த துணை நடிகராக 'அனிமல்' படத்தில் நடித்த அனில் கபூர் தேர்வாகியுள்ளார்
சிறந்த துணை நடிகையாக ''ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படத்திற்காக மூத்த நடிகை ஷபானா அஸ்மி தேர்வாகியுள்ளார்
சிறந்த நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கான விருதுக்கு அனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகியுள்ளார்
'ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி' படம் சிறந்த கதைக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளது
சிறந்த தழுவல் [உண்மை சம்பவத்திலிருந்து] கதை விருதுக்கு '12த் பெயில்' தேர்வாகியுள்ளது
சிறந்த இசைக்காக அனிமல் படம் தேர்வாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ஆவார்.
சிறந்த பாடல் வரிகள் விருதுக்கு அனிமல் படத்தில் பாடல் எழுதிய சித்தார்த் கரிமா மற்றும் சத்ரங்கா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .