சர்வதேச ஆக்கி; ஜெர்மனிக்கு எதிராக தோல்வி கண்ட இந்தியா

3 months ago 14

புதுடெல்லி,

இந்தியாவுக்கு வந்துள்ள ஜெர்மணி ஆக்கி அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டம் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் உலக சாம்பியனான ஜெர்மனி இளம் படையுடன் களம் கண்டது.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என ஜெர்மனி முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article