சர்வதேச ஆக்கி: 2-வது போட்டியில் ஜெர்மனியை வீழ்த்திய இந்தியா.. ஷூட் அவுட்டில் தொடரை இழந்த சோகம்

3 months ago 14

புதுடெல்லி,

இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஆக்கி தொடர் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலாவது போட்டி நேற்று முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற்றது.

இதனையடுத்து 2-வது போட்டி இன்று நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்தியா தரப்பில் சுக்ஜீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் தலா 2 கோல்களும் அபிஷேக் ஒரு கோலும் அடித்தனர்.

FULL TIME!India completes a stunning second-half turnaround, dominating Germany with a 5-2 win after trailing at halftime. Goals from Sukhjeet, Harmanpreet, and Abhishek seal the deal! #PFCINDvGER #IndiaKaGame #HockeyIndia...@CMO_Odisha@IndiaSports@Media_SAIpic.twitter.com/0nykWkoQEs

— Hockey India (@TheHockeyIndia) October 24, 2024

பின்னர் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. ஷூட் அவுட்டில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Germany wins the penalty shootout 3-1 and win the series!#PFCINDvGER #IndiaKaGame #HockeyIndia

— Hockey India (@TheHockeyIndia) October 24, 2024

2-வது போட்டியில் அபார வெற்றி பெற்றும் தொடரை இழந்தது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article