'சர்தார் 2' இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன்

3 months ago 16

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'சர்தார் 2' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மாளவிகா மோகனன், தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்திருந்தார். தங்கலான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிட்டத்தக்கது. தங்கலானுக்குப் பிறகு முதன்முறையாக தெலுங்கில் அறிமுகமாவிருக்கிறார். இயக்குநர் மருதி இயக்கும் தி ராஜா சாப் படத்தில் நடிகர் பிரபாஸுடன் நடிக்கிறார். தற்போது தமிழில் சர்தார்2 படத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளதை நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article