கருஞ்சீரகம்: நம் வீட்டில் உள்ள மிக முக்கியமான மூலிகைப் பொருள். நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களையும் எந்த பக்க விளைவுகள் இல்லாமல் நீக்கும். கருஞ்சீரகத்தை லேசாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டால் போதும். சமையலில் இந்தப் பொடியை சிறிதளவு சேர்த்தால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். புற்று ேநாயை எதிர்க்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
உயர் ரத்த அழுத்தத்தை நீக்கும். தினமும் இந்த கருஞ்சீரகப் பொடியை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். கல்லீரலுக்கும் நல்ல ஆரோக்யத்தை தரும். தினமும் காலையில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகப் பொடி சாப்பிட்டால் போதும். நீரில் கலந்து குடிக்கலாம். உடல் எடையையும் குறைக்க உதவும். பல நன்மைகளை தரும் கருஞ்சீரகம் மிகச் சுலபமாக எளிமையான மருந்து. அனைவரும் பயன்படுத்தி நன்மை பெறலாம்.
கம்பு: கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழைய வேகவைத்து மதிய உணவாக சாப்பிட்டு வந்தால் குடல் புண், வயிற்றுப் புண், வாய்ப்புண் குணமாகும்.கம்பங்கஞ்சி தினமும் சாப்பிட்டால் உடல் பலமடையும். கண் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும். பார்வைத் தெளிவாகும். இதயம் வலுவாகும். நரம்புகள் புத்துணர்வு பெறும். ரத்தம் சுத்தமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இள நரையை போக்கும்.
– மாலதி நாராயணன், சென்னை.
The post சர்க்கரை நோயை விரட்ட எளிய வழிகள் appeared first on Dinakaran.