சிவகங்கை, ஜன. 22: சிவகங்கை அருகே படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான அரவைப் பருவம் தொங்கப்பட்டது. படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாத தொடக்கத்தில் அரவைப் பெரும் தொடங்குவது வழக்கம். அதனடிப்படையில் 2024-25ம் ஆண்டு அரவை பருவம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆலை நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம், பொது மேலாளர் உத்தண்டி, கரும்புத் துறை தலைவர் வேணுகோபால் மற்றும் அலுவலர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு 3.5 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 70 ஆயிரம் டன் கூடுதலாகும். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சிவகங்கை மாவட்டத்தில் கூடுதலாக இருந்ததால் கரும்பு விளைச்சலும் கூடுதலாக இருந்தது. மேலும் தற்போது இந்த ஆலையில் கரும்பு அறுவடைக்கு புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
The post சர்க்கரை ஆலையில் அரவை பருவம் தொடக்கம் appeared first on Dinakaran.