சரிந்து விழுந்த அஜித்தின் 200 அடி உயர கட் அவுட் - வீடியோ வைரல்

1 week ago 2

சென்னை,

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் ரிலீஸையொட்டி, திரையரங்குகளின் முன் அஜித் கட் அவுட் வைக்கும் பணிகளில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், நெல்லையில் சுமார் 200 அடி உயரத்திற்கு அஜித் கட் அவுட் வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த கட் அவுட் திடீரென சரிந்து விழுந்தது.

அப்போது ரசிகர்கள் பதறியடித்து ஓடிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.

சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்நெல்லையில் Good Bad Ugly திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட அஜித் கட் அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்புரசிகர்கள் பதறியடித்து ஓடிய வீடியோ சமூக வளைதளங்களில் வைரல் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்Full Video Link : https://t.co/6qAbmseI41pic.twitter.com/HWvOO6yRay

— Thanthi TV (@ThanthiTV) April 6, 2025
Read Entire Article