
காரைக்குடி,
சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர் ஒவ்வொரு அமைப்பையும் காவி மயமாக்க முயற்சித்து வருகின்றனர். இந்தி, இந்துத்துவாவை திணிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது எண்ணம். அது தமிழகத்தில் எடுபடாது. தமிழகத்தில் 2026-ம் ஆண்டு தேர்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
எடப்பாடி பழனிசாமி தேர்தலில் முதல்வர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று முதல்வர் ஆகவில்லை. சரித்திர விபத்தால் முதல்-அமைச்சரானவர். அவர் முதல்-அமைச்சரான பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தகளிலும் அ.தி.மு.க. தோல்வியையே சந்தித்துள்ளது. 2 மக்களவை தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தல் என 3 இன்னிங்சில் அவுட் ஆன எடப்பாடி பழனிசாமி 2026-ல் நடக்கும் 4-வது இன்னிங்சிலும் அவுட் ஆவார். இவ்வாறு அவர் கூறினார்.