சரத்பவாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

6 months ago 20

சென்னை,

தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சி தலைவர் சரத்பவார் இன்று தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சரத்பவாருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சியின் தலைவர் சரத்பவார் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். பொதுவாழ்விலும் நாட்டின் வளர்ச்சியிலும் தங்களது அளப்பரிய பங்களிப்புகள் பெரும் ஊக்கமாக விளங்குகின்றன. தங்களது சீரிய தலைமை தொடர, நல்ல உடல்நலத்துடனும் வலிவோடும் தாங்கள் திகழ விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article