திருவனந்தபுரம்: கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் சம்பளம் வழங்குவதில், கடந்த சில வருடங்களாக மிகவும் தாமதம் ஏற்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்கு பின்பு தான் சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் மாதத்தில் முதல் நாள் சம்பளம் வழங்க வேண்டும். டிரைவர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நேற்று 24 மணிநேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் பல பகுதிகளில் பஸ் போக்குவரத்து முடங்கியது.
The post சம்பளம் வழங்குவதில் தாமதம் கேரளாவில் பஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக் appeared first on Dinakaran.