சம்பளத்தை உயர்த்தும் பிரபல இசையமைப்பாளர்கள்?

3 months ago 21

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பளராக இருப்பவர் அனிருத். இவர் கடந்த 2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, "நா ரெடி", "ஹுக்கும்", "டிப்பம் டப்பம்", சாலேயா" உட்பட பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இவ்வாறு சிறந்த இசையமைப்பாளராக உள்ள அனிருத்தின் வரிசையில் பல படங்கள் உள்ளன. அதன்படி, அஜித்தின் 'விடாமுயற்சி', விஜய்யின் 'தளபதி 69', சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே.23' மற்றும் ஷாருக்கானின் அடுத்த படம் என பல படங்களுக்கு அனிருத் இசையமைக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்கள் கைவசம் உள்ளநிலையில், அனிருத் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ.10 முதல் ரூ 12 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

அனிருத்தைத்தொடர்ந்து பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமானும் சம்பளத்தை உயர்த்தி, தான் அடுத்ததாக இசையமைக்க உள்ள ராம் சரணின் ஆர்.சி.16 படத்திற்காக ரூ.10 கோடி சம்பளம் பெறுவதாக தெரிகிறது. அதேபோல், புஷ்பா: தி ரைஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது சம்பளத்தை ரூ.8 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article