சமூக வலைத்தளங்களில் சீமானுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாதக சார்பில் புகார்

5 hours ago 4

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘சீமான் தலை விரைவில் துண்டிக்கப்படும்.

விரைவில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும், நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு இரங்கல் செய்தி அதிவிரைவில் வரும், அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பதிவிட்டுள்ள சந்தோஷ் உட்பட 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post சமூக வலைத்தளங்களில் சீமானுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாதக சார்பில் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article