சென்னை : சென்னையில் நேற்றிரவு முதல் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் வரும் 18ம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சுஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையால் எந்தபாதிப்பும் ஏற்படாமலிருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் துணைமுதலமைச்சர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சராசரியாக 3.60 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. காலை 9.30 மணி நிலவரப்படி எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை. கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர வேறு எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை.21 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து நடைபெறுகிறது. மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அக்டோபர் மாத மழையை கவனத்தில் கொண்டு கூடுதலாக மோட்டார்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவு தயாரிக்கும் இடங்கள் 120ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 129 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சமூக வலைதங்களில் பதியப்படும் மழை தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது.கனமழையால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சிறிது நேரத்தில் சரிசெய்யப்படும். “இவ்வாறு தெரிவித்தார்.
The post சமூக வலைதங்களில் பதியப்படும் மழை தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.