சமூக அநீதிகளுக்கு எதிரான புரட்சியாளர் அம்பேத்கர்: மு.க.ஸ்டாலின் பதிவு

6 months ago 17

சென்னை,

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் அம்பேத்கர் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"கற்பி - புரட்சி செய் - ஒன்றுசேர்"

பெரும்பாலான மக்களின் உரிமைகளையும் - கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்!

கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர்!

தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி - நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார்! அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article