சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சபிரகார விழா : இன்று துவக்கம்

4 hours ago 2

சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பஞ்சபிரகாரவிழா இன்று (செவ்வாய்கிழமை) துவங்குகிறது.

பஞ்சபிரகாரவிழாவை முன்னிட்டு, இன்று (06.05.2025) முதல் 13.05.2025 வரை 8 நாட்கள் அம்மன், இரவு 8 மணிக்கு வெள்ளி கேடயத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.

9ம் நாளான 14.05.25 அன்று அம்மன் ரிஷப வாகனத்தில் இரவு 9 மணிக்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

10ம் திருநாளான 15.05.25 அன்று அம்மனுக்கு சிறப்பு வாய்ந்த பஞ்சபிரகார விழா மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. காலை 6 மணி அளவில் கோவிலில் உள்ள தங்கம், 25 வெள்ளி குடங்களில் அம்மனுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து பரிவாரங்கள் புடைசூழ, மேளதாளத்துடன் புனித நீர் கொண்டு வரப்படுகிறது.

யானையில் ஊர்வலமாக தேரோடும் வீதி வழியாக கோவில் வந்தடைகிறது. அந்த புனிதநீரில் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க மகா அபிஷேகம் அம்மனுக்கு நடைபெறும்.

இரவு 12 மணிக்கு அம்மன் வெள்ளி விமான வாகனத்தில் எழுந்தருளி, வெண்ணிற பாவாடை அணிந்து மூலஸ்தான ஓட்டிய கருவறை பிரகாரத்தை முதல் சுற்றாகவும், தங்க கொடிமரத்தை இரண்டாம் சுற்றாகவும், தங்கத்தேர் வரும் பிரகாரத்தை மூன்றாம் சுற்றாகவும், தெற்கு தேரோடும் வீதியில் பாதியும், வடக்கு மடவாள வீதியை நான்காம் சுற்றாகவும், கிழக்கு, மேற்கு, வடக்கு தேரோடும் வீதியை ஐந்தாம் சுற்றாக நிறைவு செய்து ஐந்து பிரகாரங்களில் சிவ ரூபமாகவும், சக்தி பஞ்சாரியாகவும் வலம் வந்து பக்தர்களுக்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கருணையோடு அருள்பாலிக்கிறார்.

 

11ம் நாளான 16.05.25 அன்று தங்க சிம்ம வாகனத்தில் இரவு 10 மணிக்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார்.

12ம் நாளான 17.05.25 அன்று முத்து பல்லக்கு வாகனத்தில் இரவு 12 மணிக்கு முகமகிழ்ந்து எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார்.

13ம் நாளான 18.05.25 அன்று தங்க கமல வாகனத்தில் இரவு 10 மணிக்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார்.

14ம் நாளான 19.05.25 அன்று வெள்ளி குதிரை வாகனத்தில் இரவு 10 மணிக்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார்.

15ம் நாளான 20.05.25 அன்று வெள்ளி காமதேனு வாகனத்தில் இரவு 10 மணிக்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார்.

16ம் நாளான 21.05.25 அன்று மரகற்பகவிருட்ச வாகனம் இரவு 10 மணிக்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார்.

17ம் நாளான 22.05.25 அன்று மரகாமதேனு வாகனத்தில் இரவு 10 மணிக்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார்.

பஞ்ச பிரகார விழா நிறைவு நாளான 18ம் நாளான 23.05.25 அன்று மரஅன்னபட்சி வாகனத்தில் இரவு10 மணிக்கு எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிக்கிறார்.

Read Entire Article