சமயபுரத்தில் பஞ்சபிரகார விழா கோலாகலம்: காவிரியிலிருந்து தங்க குடத்தில் யானைமீது தீர்த்தகுடம் ஊர்வலம்

3 hours ago 2

சமயபுரம், மே 16: தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது முதன்மை கோவிலாக சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் வருடம் தோறும் ஐந்து பெரும் உற்சவம் நடைபெறும், அதில் ஒன்று பஞ்சப்பிரகார உற்சவம் ஆகும். அதன்படி கடந்த மே 6 முதல் 14 தேதி வரை அம்மன் வெள்ளி கேடயத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான ரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள் காவிரி ஆற்றில் இருந்து வெள்ளி குடத்தில் தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் நேற்று கொண்டு வரப்பட்டு மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு அம்பாள் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளிகிறார் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

மேலும் மே 17ம் தேதி புதன்கிழமை அன்று இரவு 12 மணியளவில் முத்து பல்லாக்கில் அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வரவேற்கிறார். 18ம் தேதி தங்க கமல வாகனம், 19ம் தேதி குதிரை வாகனம், 20ம் தேதி வெள்ளி காமதேனு வாகனம், 21ம் தேதி மர கற்பக விருட்ச வாகனம், 22ம் தேதி மறக்க காமதேனும் வாகனம், விழா நிறைவாக 23ஆம் தேதி அம்பாள் மர அன்னப்பற்றி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து, திருவீதி உலா வரவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவல் குழு உறுப்பினர்கள் தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் கோவில் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

The post சமயபுரத்தில் பஞ்சபிரகார விழா கோலாகலம்: காவிரியிலிருந்து தங்க குடத்தில் யானைமீது தீர்த்தகுடம் ஊர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article