
சென்னை,
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2: தி ரூல் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது. இதனையடுத்து புஷ்பா 3 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முதல் பாகத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலீலா நடித்துள்ள 'ராபின்ஹுட்' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் புஷ்பா: தி ரைஸ் படத்தின் ஊ சொல்ரியா பாடல் பற்றிய ஆச்சரியமான தகவலை தயாரிப்பாளர் ரவி ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, அந்த சிறப்புப் பாடலில் நடனமாட சமந்தாவுக்கு முன்பு, நடிகை கெட்டிகா ஷர்மாவை அணுகியதாகவும், இருப்பினும் சில காரணங்களால் அவரால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் ரவிசங்கர் தெரிவித்தார். .
கெட்டிகா ஷர்மா ராபின்ஹுட் படத்தில் 'அதி தா சர்ப்ரைஸ்' என்ற சிறப்புப் பாடலுக்கு நடனமாடி உள்ளார். அடுத்ததாக ஸ்ரீவிஷ்ணுவுக்கு ஜோடியாக 'சிங்கிள்' படத்தில் நடித்து வருகிறார்.