சமந்தா நடித்துள்ள வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 months ago 22

சென்னை,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது ஹாலிவுட் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளர். இது இவர்களது கூட்டணியில் 2-வது முறையாக உருவாகும் தொடராகும். ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த 'சிட்டாடல்' வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரின் யூனிவர்சின் ஒரு அங்கமாக தான் இந்த புதிய சிட்டாடல் வெப் தொடர் உருவாகியுள்ளது. 

இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹாலிவுட் வெப் தொடரான இது வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் டிரெய்லர் வருகிற 15-ந் தேதி வெளியாக உள்ளது.

Read Entire Article