‘சமத்துவ நெறியைப் போற்றுவோம்’ - வள்ளலார் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் கருத்து

7 months ago 38

சென்னை: “உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்” என ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான ‘வள்ளலார்’ ராமலிங்க அடிகள் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5) கொண்டாடப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் வள்ளலார் பிறந்த நாளான அக்டோபர் 5, 'தனிப்பெருங்கருணை நாள்' எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.

Read Entire Article