சப்பாத்தி மீந்து போனால்…

1 week ago 4

நன்றி குங்குமம் தோழி

*முதல் நாள் செய்த சப்பாத்தி மீந்துவிட்டால் துண்டுகளாக்கி, மிக்சியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் பூப்பூவாய் வரும். அதில் உப்புமா செய்தால் சுவையாக இருக்கும்.

*சப்பாத்தியை மிக்ஸியில் அரைத்து தேவைக்கேற்ப சர்க்கரைப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து நெய் விட்டு லட்டுகள் செய்தால்
சுவையான ஸ்வீட் தயார்.

*சப்பாத்தியுடன் தோளுடன் கூடிய ஒரு உருளைக்கிழங்கைப் போட்டு மூடிவைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

*சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிதளவு நீர் தெளித்து மைக்ரோவேவில் சில விநாடிகள் வைத்து எடுத்தால் மறுபடி மென்மையாகி விடும்.

*சப்பாத்தி மீந்து போனால் மிருதுவாக இருக்காது. ஒரு ஸ்டீல் டப்பாவில் அவற்றை வைத்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் எடுத்தால் மிருதுவாகி விடும்.

தொகுப்பு :ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

வெற்றிலை மருத்துவ குணங்கள்

*கொடி வகைகளைச் சேர்ந்த இது வெப்பமான இடங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளன. வைட்டமின்களுடன் நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்கள், குடல் புண்கள், உடல் இறுக்கத்தை குணப்படுத்துகிறது.

*வெற்றிலை நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. செரிமானத்தை தூண்டி, வாய் நாற்றத்தையும் போக்கும்.

*வெற்றிலையை மெல்லுவதினால் ஈறுகளில் உள்ள வலி, ரத்தக்கசிவு நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும்.

*வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித் தள்ளும் தன்மை கொண்டது.

*நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுக்கும். படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

*வெற்றிலைச் சாறுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் போன்றவை குணமாகும்.

– எம்.வசந்தா, சென்னை.

The post சப்பாத்தி மீந்து போனால்… appeared first on Dinakaran.

Read Entire Article