திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நேற்று நிருபர்களிடம் கூறியது: சபரிமலையில் கடந்த மண்டல, மகரவிளக்கு காலத்தில் சுமார் 55 லட்சம் பக்தர்கள் வந்தனர். இது கடந்த வருடத்தை விட 6 லட்சம் பேர் அதிகமாகும். கோயில் வருமானமும் இவ்வருடம் அதிகரித்துள்ளது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.440 கோடியாகும்.
சபரிமலையில் ரோப் கார் பணிகளுக்கான சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைத்தால் மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டி உடனடியாக பணிகள் தொடங்கப்படும். 18 மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்காக 10 பெட்டிகள் ஒதுக்கப்படும். ரோப் கார் பயன்பாட்டுக்கு வந்தால் டோளி மற்றும் டிராக்டர் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* ஐயப்பனின் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்பனை
சபரிமலை ஐயப்பனின் உருவம் பொறித்த 2, 4, 6, 8 கிராம் எடையுள்ள தங்க டாலர்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன் சித்திரை விஷு நாளில் இருந்து இந்த தங்க டாலர்கள் விற்பனை தொடங்கும்.
The post சபரிமலையில் ரோப் கார் அமைக்கும் பணி அடுத்த மாதம் துவக்கம் appeared first on Dinakaran.