திருவனந்தபுரம்: 2025-2026ம் நிதியாண்டுக்கான கேரள பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என். பாலகோபால் நேற்று தாக்கல் செய்தார். அவர் கூறியது: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலவரி 50 சதவீதம் உயர்த்தப்படும். மின்சார வாகனங்களுக்கான வரி மற்றும் நீதிமன்ற கட்டணம் அதிகரிக்கப்படும். சபரிமலையில் ரூ.1033.62 கோடிக்கான மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
இதில் சபரிமலை சன்னிதானத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.778.17 கோடியும், பம்பை வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.207.48 கோடியும், பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள நடைபாதை பணிகளுக்காக ரூ.47.97 கோடியும் ஒதுக்கப்படும். சிறுபான்மை பிரிவை சேர்ந்த 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. ஆனால் இவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post சபரிமலையில் ரூ.1033 கோடி மாஸ்டர் பிளானுக்கு அனுமதி: கேரள பட்ஜெட்டில் தகவல் appeared first on Dinakaran.