
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. அந்த வகையில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி, முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் கார்த்தி.
தற்போது இவர் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பி.ஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது தவிர மாரி செல்வராஜ், சுந்தர். சி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் கார்த்தி.
இந்நிலையில் கார்த்தி முதன்முறையாக மாலை அணிந்து சபரிமலையில் தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் கார்த்தி, நடிகர் ரவி மோகனுடன் இணைந்து சபரிமலைக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. கார்த்தி தற்போது சர்தார் - 2 படத்திலும் ரவி மோகன் காரத்தே பாபு படத்திலும் நடித்து வருகின்றனர்.