சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு

1 week ago 3

திருவனந்தபுரம்: சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுவதால் கடந்த 3 தினங்களாக தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 12ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் (13ம் தேதி) முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நடை திறந்த அன்று முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் 4 மணிநேரத்திற்கும் அதிகமாக வரிசையில் காத்திருக்கின்றனர். வழக்கமாக மாத பூஜை நடைபெறும் நாட்களில் இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். ஆனால் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக இரவு 11 மணிக்குத் தான் நடை சாத்தப்பட்டு வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகமாக இருந்தது. நாளை (17ம் தேதி) இரவுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் பங்குனி மாத பூஜைகளுக்காக மார்ச் 14ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

* மார்ச் 14ம் தேதி முதல் புதிய வசதி
சபரிமலையில் மார்ச் 14ம் தேதி முதல் பக்தர்கள் 18ம் படி ஏறிய உடன் தரிசனம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இனி பக்தர்கள் 18ம் படி ஏறிய பின்னர் இடது புறமாக சென்று நடை மேம்பாலத்தில் ஏறவேண்டிய அவசியம் இல்லை. 18ம்படி ஏறிய உடன் கொடிமரத்தின் இடதுபுறமாகவும், வலதுபுறமாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம். 18ம் படியின் கடைசி படியில் ஏறும்போதே ஐயப்பனை தரிசிக்கலாம்.

The post சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article