சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு: மே 19-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகை

5 hours ago 4

தேனி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதன்படி இடவம் மாதத்துக்காக (வைகாசி) இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.

தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி நடைதிறக்க உள்ளார். மங்கல இசை முழங்க கோயில் நடை திறக்கப்பட்டு, ஆழிக்குண்டத்தில் அக்னி ஏற்றப்படும். பின்னர், ஐயப்பன் விக்கிரகத்தில் உள்ள விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து பூஜை எதுவுமின்றி நடை சாத்தப்படும்.

Read Entire Article