சபரிமலை பங்குனி உத்திர ஆராட்டு விழா

20 hours ago 2

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் (தமிழ் மற்றும் மலையாளம்) முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். அதேபோல் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவும் 10 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி முன்னிலையில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ம தத்தன் ஆகியோர் காலை 9.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்தனர். விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

வருகிற 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டையும், 11-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டும் நடைபெறும்.

இதனை தொடர்ந்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகை வருகிறது. இதனால் சபரிமலை கோவில் தொடர்ந்து 18-ந் தேதி வரை திறந்திருக்கும்.

விஷு பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுவதால் அன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் கனி காணும் சடங்கு நடைபெறும். பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி மற்றும் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் வழங்குகிறார்கள்.

Read Entire Article